Android உலகை கதிகலங்க வைத்திருக்கும் Stagefright வைரஸ் (95 சதவீதமான ஸ்மார்ட் சாதனங்கள் பாதிப்பு...!)

உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களுள் அதிகமானவைகள் Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம் Android இயங்குதளமானது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது Samsung, Google, HTC, LG, Sony உட்பட இன்னும் ஏராளமான நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த Android இயங்குதளம் பயன்படுத்துகின்றமையை முக்கிய காரணமாக குறிப்பிடலாம். அத்துடன் Android சாதனங்களுக்கு என பல லட்சக்கான செயலிகள் கிடைக்கின்றமையும், சிறந்த பயன்களை தரக்கூடிய ஸ்மார்ட் போன்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடிகின்றமையும் இன்னுமொரு காரணமாக குறிப்பிடலாம். இவ்வாறு உலகை கலக்கிக் கொண்டிருந்த Android சாதனங்களுக்கு யார் பட்ட கண் திருஷ்டியோ தெரியவில்லை, திடீர் என விழுந்துள்ளது Stagefright எனும் ஒரு அணுகுண்டு. இது Android ஸ்மார்ட் சாதனங்களுக்கு பரவும் ஒரு தீய நிரலாகும். Android சாதனங்களில் MMS வசதியில் உள்ள பலவீனமான ஒரு அம்சத்தை வைத்து இது உலகில் இருக்கக்கூடிய 95 சதவீதமான Android சாதனங்களை இது ஆட்டிப்படைத்து வருகின்...