Android உலகை கதிகலங்க வைத்திருக்கும் Stagefright வைரஸ் (95 சதவீதமான ஸ்மார்ட் சாதனங்கள் பாதிப்பு...!)

உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களுள் அதிகமானவைகள் Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம் Android இயங்குதளமானது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது Samsung, Google, HTC, LG, Sony உட்பட இன்னும் ஏராளமான நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த Android இயங்குதளம் பயன்படுத்துகின்றமையை முக்கிய காரணமாக குறிப்பிடலாம்.




அத்துடன் Android சாதனங்களுக்கு என  பல லட்சக்கான செயலிகள் கிடைக்கின்றமையும், சிறந்த பயன்களை தரக்கூடிய ஸ்மார்ட் போன்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடிகின்றமையும் இன்னுமொரு காரணமாக குறிப்பிடலாம்.



இவ்வாறு உலகை கலக்கிக் கொண்டிருந்த Android சாதனங்களுக்கு யார் பட்ட கண் திருஷ்டியோ தெரியவில்லை, திடீர் என விழுந்துள்ளது Stagefright எனும் ஒரு அணுகுண்டு.


இது Android ஸ்மார்ட் சாதனங்களுக்கு பரவும் ஒரு தீய நிரலாகும். Android சாதனங்களில் MMS வசதியில் உள்ள பலவீனமான ஒரு அம்சத்தை வைத்து இது உலகில் இருக்கக்கூடிய 95 சதவீதமான Android சாதனங்களை இது ஆட்டிப்படைத்து வருகின்றது.


இது ஆரம்பத்தில் MMS மூலம் ஒரு வீடியோ கோப்பாக உங்கள் Android சாதனத்தை வந்தடையும். அவைகளை நீங்கள் சுட்டி பார்க்க வேண்டியதில்லை அவ்வாறு வந்தடைந்தால் மாத்திரம் போதுமானது உங்கள் சாதனம் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். மேலும் உங்கள் Android சாதனத்தை வந்தடைந்த MMS தானாக நீக்கப்பட்டு விடுவதுடன் அதில் உள்ள நிரல்கள் தானாகவே கட்டவிழ்க்கப்பட்டு உங்கள் Android சாதனத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.


 Stagefright வைரஸ் பாதிப்பு


இது உங்கள் ஸ்மார்ட் சாதங்களுக்குள் உட்புகுந்தவுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் துருவிகளால் கையாளக்கூடியதாக அமைந்து விடும்.

இதனால் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் கடவுச்சொற்கள் உட்பட உங்கள் Android சாதனத்தில் உள்ள வீடியோ கோப்புக்கள், புகைப்படங்களையும் அவர்களால் கையாள முடியும். அதுமட்டுமல்ல உங்கள் Android சாதனத்தில் உள்ள மைக்ரோபோனையும் கூட அவர்களால் இயக்க முடியும் என்றால் பாருங்களேன்.

இந்த குறைபாட்டை கண்டறிந்த Zimperium நிறுவனம் Android ஐ நிர்வகிக்கும் Google இற்கு இது தொடர்பில் அறியப்படுத்தி இருந்தது. இதன் அறிக்கைப்படி Android 2.2 (Froyo) தொடக்கம் Android இன் அண்மைய பதிப்பான Android 5.1 Lollipop வரையான கிட்டத்தட்ட உலகில் பயன்படுத்தப்படும் 950 மில்லியன் ஸ்மார்ட் சாதனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இது மொத்தப் பாவனையில் 95 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Stagefright எனும் இந்த தீய நிரலால் உங்கள் Android சாதனமும் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய Zimperium நிறுவனம் Stagefright Detector எனும் ஒரு செயலியையும் Play Store இல் வெளியிட்டுள்ளது.

 Stagefright பாதிக்கப்பட்டுள்ளதா எனஅறிதல்

இதனை உங்கள் Android சாதனத்திற்கு தரவிறக்கி Scan செய்வதன் மூலம் உங்கள் Android சாதனமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக

இதனை தரவிறக்கி Scan செய்த பின் பெறப்படும் முடிவானது சிவப்பு நிறத்தில் Vulnerable என பெறப்பட்டால் உங்கள் Android சாதனம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். பெறப்படும் முடிவானது பச்சை நிறத்தில் Not vulnerable என பெறப்பட்டால் உங்கள் Android சாதனம் இதனால் பாதிக்கப்பட்டிருக்காது.

இதனை தொடர்ந்து இந்த குறைபாட்டை சரி செய்வதற்கான பாதுகாப்பு மேம்படுத்தல்களை வழங்குவதற்கு  HTC, LG, Lenovo, Motorola, Samsung மற்றும் Sony போன்ற நிறுனவங்கள் முன்வந்துள்ளன. எனினும் இந்த நிறுவனங்களால்  அண்மையில் வெளியிடப்பட்ட முக்கிய ஸ்மார்ட் போன்களுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

எது எப்படியோ இது MMS மூலம் பரவி வருவதனால் MMS தானாக தரவிறக்கப்படும் செயற்பாட்டை முடுக்கி வைப்பதனால் இதலிருந்து பாதுகாப்பை பெறலாம்.


நீங்களும் குறுஞ்செய்திகளை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் Android சாதனத்திலேயே தரப்பட்டுள்ள Message என்பதை பயன்படுத்துபவர் எனின் MMS தானாக தரவிரக்கப்படுவதை பின்வரும் முறையில் தடை செய்யலாம்.

  • முதலில் Message ஐ திறந்து கொள்க.
  • பின் Menu Button ஐ அழுத்துவதன் மூலம் பெறப்படும் Settings என்பதை சுட்டுக.
Android குறுஞ்செய்தி அமைப்புக்கள் Android குறுஞ்செய்தி MMS முடக்கல்

  • பின்னர் SMS/MMS எனும் பகுதியில் MMS என்பதற்கு கீழ் தரப்பட்டிருக்கும் Auto Retrieve என்பதில் உள்ள Tick அடையாளத்தை நீக்கி விடுக.

நீங்கள் குறுஞ்செய்திகளை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் Google தரும் Messenger ஐ பயன்படுத்துபவர் எனின் MMS தானாக தரவிரக்கப்படுவதை பின்வரும் முறையில் தடை செய்யலாம்.

  • முதலில் Messenger செயலியை திறந்து கொள்க.

sms  Messenger அமைப்புக்கள்


  • பின் Menu Button ஐ அழுத்துவதன் மூலம் பெறப்படும் Settings என்பதை சுட்டுக.

Android messenger மேலதிக அமைப்புMMS தானாக தரவிரக்கப்படுவதை முடக்குதல்



  • இனி பெறப்படும் பகுதியில் Advanced என்பதை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Auto Retrieve (Automatically retrieve MMS Message) என்பதில் உள்ள Tick அடையாளத்தை நீக்கி விடுக.

நீங்கள் குறுஞ்செய்திகளை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் Google தரும் Hangout ஐ பயன்படுத்துபவர் எனின் MMS தானாக தரவிரக்கப்படுவதை பின்வரும் முறையில் தடை செய்யலாம்.

  • Hangout செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளால் ஆன Button ஐ சுட்டுக.

Hangout Settings சாளரம்



  • இனி பெறப்படும் சாளரத்தில் Settings என்பதை சுட்டும் போது பெறப்படும் பகுதியில் SMS என்பதை சுட்டுக.

Google Hangout MMS தானாக தரவிரக்கப்படுவதை முடக்குதல்



  • இனி தோன்றும் சாளரத்தில் Auto Retrieve (Automatically retrieve MMS Message) என்பதில் உள்ள Tick அடையாளத்தை நீக்கி விடுக. 





இந்த மாற்றத்தை மேற்கொண்டதன் பின் உங்களை அறியாமல் MMS கோப்புக்கள் உங்கள் Android சாதனத்திற்கு தரவிறக்கப்பட வாய்ப்பு இல்லை எனினும் இனங்காண முடியாத வகையில் Virus கோப்புக்கள் உங்களை வந்தடைந்தால் அதனை சுட்ட வேண்டாம்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood