ஆயுதமல்ல அந்தரங்க உறவு!

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்... ஆனால், தாமதமாக நடந்த திருமணம்! அவருக்கும் மனைவி செல்விக்கும் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் இடையே உடலுறவு என்பது என்றாவது நடக்கும் நிகழ்வு. பலமுறை கெஞ்சினால்தான் ஒருமுறையாவது அந்த விஷயம் நடந்தேறுமாம். அவருடைய மனைவியை விசாரித்தேன். செல்விக்கு சரவணனிடம் எந்தப் புகாரும் இல்லை. அவரைப் பிடித்தும் இருந்தது. ஆனால், அழைக்கும் போதெல்லாம் செக்ஸுக்கு ஒப்புக்கொண்டால் கணவர் தனது கட்டுக்குள் இருக்கமாட்டாரோ என்ற எண்ணம். அதையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரை தனது சொல்படி நடக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.‘கூப்பிட்டதுமே சரின்னுட்டா புருஷன் உன்னை மதிக்கமாட்டான். பிகு பண்ணினாதான்உன்னேயே சுத்தி வருவான்’ என்று செல்வியின் அம்மா வேறு தூபம் போட்டிருக்கிறார். இப்படி ஆண்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில பெண்கள் செக்ஸுக்கு மறுப்பதை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். இது சரியா, தவறா? இந்தப் பிரச்னை பல ...