சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி || Sangakkara dismissed Dhoni

டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார். சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஸ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் டோனி மொத்தம் 124 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. 151 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். டோனி 124 விக்கெட்டுகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தினேஷ் ராம்தின், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். T- 20 cricket tournament as the highest wicket -keeper Dhoni in terms of players who dismissals , Sangakkara precedes . Campiyans League match against Perth skarccars asis...