யாழில் பேஸ்புக் விபரீதம்! சகோதரிகளுக்கிடையில் தற்கொலை முயற்சி

இவா் தனது பேஸ்புக்கை திறந்து வைத்துவிட்டு அவசர அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த போது யுவதியின் தங்கை தனது முகப்புத்தகத்தைப் பார்வையிட்டு்க் கொண்டிருந்ததால் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது தமக்கையின் முகப்புத்தகத்திற்கு தகவல்கள் அனுப்பியிருந்த சில ஆண் நண்பா்களின் பெயா்களைக் கூறி தாய்க்கு அந்த விபரங்களைத் தெரியப்படுத்திய போது கோபமடைந்த யுவதி அறையை மூடிவி்ட்டு துாக்கில் தொங்க முயன்றுள்ளார்.
யுவதியின் இச் செயலைப் பார்த்த தாயும் சகோதரியும் கத்திக் கொண்டு தெருவால் சென்றவா்களை அழைத்து கதவை உடைத்து யுவதியைக் காப்பாற்றியதாகத் தெரியவருகின்றது. இதே நேரம் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்பட்ட வழிப்போக்கா் ஒருவா் கதவின் பலகை முதுகில் கிழித்து காயமடைந்துள்ளார்.
குறிப்பிட்ட நபா் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்பட்ட வேளை தாயாரும் உள்ளே நுழைய முற்பட்டதால் வழிப்போக்கா் கதவி்ன் துவாரத்தினுள் நசுங்கி பலகையால் கீறுப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Comments
Post a Comment