இன்றைய ராசிபலன் 16-08-2014

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள். மிதுனம் மிதுனம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள். கடகம் கடகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆத...