"N” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?
யாராலும் அடக்க முடியாத `N’ எழுத்துக்காரர்கள்!
எந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.

பழைமை வாதத்தை எதிர்ப்பர். எந்தச் செயலிலும் சிறிதும் தயக்கமின்றி தானியங்கிபோல் தனியராய்ச் செயற்படுவர். மனதில் பட்டதை அப்படியே கூறி, ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் உண்டு. மனிதகுலம் நன்றாக இருக்கப் பாடுபட்டுக் கொண்டே இருப்பர். தூரதேசப் பயணங்களில் விருப்பமுடையவர். பொதுக் காரியங்களில் தானாகவே முன்வந்து செயல் புரிந்து நற்பெயர் எடுப்பர். சிலர் சூதாட்டம், மோட்டார் கார்ப் பந்தயம், அதிர்ஷ்டலாபச் சீட்டு என்பவற்றை நம்பி ஏமாறுவதும் உண்டு.
நல்ல மனதுடைய இவர்களுக்கு ஒரே எதிரி பிறரிடம் முரண்பாடான கருத்துகளை அள்ளிக் கொட்டுவதுதான். இரவு, பகல் பாராது எப்பொழுது எழுப்பினாலும் துள்ளிக் குதித்து ஓடிவருவர். சமுதாய மாற்றங்கள் நிகழவேண்டும், அரைத்த மாவையே அரைக்கக் கூடாது, உயிர்களின் நலனுக்காக சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் எனத் தைரியமாகப் பொது இடங்களில் கூறுவர்.
இவர்களின் பலவீனம் எதுவென்றால், எந்தப் பழக்கத்திற்கு இளவயதில் ஆட்படுகிறார்களோ, அதைக் கடைசிவரை விடமாட்டார்கள். எனவே, சிறு வயது முதல் நல்லவர்களுடன் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. புதுப்புது நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வர். காதலிலும் அப்படித்தான் என்கிறது பெயரியல். பிறர் தவறுகளை மன்னிக்கும் மனப்பாங்கு இவர்களின் நல்ல குணாதிசயம். நாளொரு திட்டத்தை அறிவித்து அசத்துவர். அறையை வாஸ்துப்படி மாற்றுவர். நிறுவன பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவர். கேட்டால், எதில் வேண்டுமானாலும் நல்ல மாற்றங்கள் நிகழும் என்பர். திருமணத்திற்கு முன் பெரியவர்களைக் கேட்டு முடிவெடுப்பது நலம். வஞ்சப் புகழ்ச்சியை உண்மை யெனக் கருதி, எதிரிகளுக்குப் பலவிதங்களில் நன்மை புரிந்து அவர்கள் வாயை அடைத்து இனிய நண்பர்களாக்குவது இவர்களின் சிறப்பாகும். முடியாது எனக் கருதப்படும் வேலைகளை இவர்களிடம் ஒப்படைத்தால், தங்கள் அணுகுமுறையால் வெற்றிகாண்பது நமக்கு பிரமிப்பாக இருக்கும். உடல் உழைப்பு குறைவாகவே இருக்கும். புத்தி கூர்மையால் எளிதான வழியில் பணம் பண்ணுவதில் சமர்த்தர்.
கண்கள் காந்தம்போல் இருக்கும். அரசியல், திரைப்படம், தரகுத் தொழில், சோதிடம், இசை போன்ற துறைகள் வெற்றிதரும். நரம்பு சம்பந்தமான நோய்கள், வாயுக்கோளாறு, உடல்வலி அடிக்கடி ஏற்படும். கணனி போன்ற திறமையான மூளையுள்ள இவர்கள் `கழுவுற மீனில் நழுவுற மீன்’ போன்ற குணம் உடையவர்கள்!
ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Comments
Post a Comment