அடுத்த விஜய், விஷால் தான்- கிளம்பிய புது சர்ச்சை

விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். இவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி சுமார் 13 வருட காலமாக விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ஜெயசீலன். இவர் தான் தற்போது விஷாலின் அகில இந்திய ரசிகர்கள் மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் வந்த சில மாதங்களிலேயே விஷால் மிகவும் சுறுசுறுப்பாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் கூறுகையில் ‘கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் விஷாலை, விஜய் உயரத்திற்கு கொண்டு செல்வேன்’ என்று கூறியுள்ளாராம்.