Posts

Showing posts with the label Chrome

தீபாவளிக்கு மும்முனைப்போட்டி! || The three-Diwali!

Image
கடந்த மாதம் வரை விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ஐ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. இந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே விஷாலின் பூஜை ஒருவேளை பின்வாங்கலாம் என்று கோலிவுட்டில் டாக் எழுந்தது. ஆனால், பூஜை போடும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியே படத்தை ஆரம்பித்த விஷால், சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டவர், அதே அடிதடி என்று காண்பித்தாலும் ஹரியின் அதிரடியான திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்ற தைரியத்தில் டீசரின் முடிவில் தீபாவளி வெளியீடு குறிப்பிட்டிருந்தார். அதேபோல், 65 தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளில் சிக்கியிருந்த விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ விழாவை இம்மாதம் 18-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் கத்தியும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆக, தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என்ற மூன்று மெகா படங்கள் வெளியாகி பலத்த மும்முனைப்போட்டி நடக்க உள்ளது. Vijay 's kn...

குரோம் பிரவுசரால் லேப்டாப் பேட்டரிக்கு ஆபத்தா..?? பயனுள்ளதை நண்பர்களுடன் பகிருங்கள்

Image
விண்டோஸில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர் லேப் டாப்பில் உள்ள பேட்டரியின் வாழ்நாளை குறைத்து விடும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அய்யோ..அப்போ நான் என்ன பண்றது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம். குரோம் பிரவுசர் மட்டும் பிரச்சனை என்றால் பின் மற்ற பிரவுசர்கள் என்ன செய்கின்றன. இந்த பிரச்சனையை முழுவதும் தெரிந்து கொள்ள முதலில் system clock tick rate பற்றி தெரிந்து கொள்வது அவசியம். system clock tick rate என்பது விண்டோஸ் தனக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்த, அல்லது தான் வேண்டப்படாத காலத்தில் ப்ராசசர் தூங்கும் நிலையில் உள்ளது. வரையறை செய்யப்பட்ட கால இடைவெளியில் எழுந்து தான் செயல்பட வேண்டுமா என்று பார்த்து, சூழ்நிலைக்கேற்ப செயல்படுகிறது. இந்த இடைவெளி காலத்தினை குரோம் 1.000ms ஆக குறைத்து செட் செய்கிறது., இது 15.625 milliseconds ஆக இருக்கும். அதாவது ப்ராசசர், ஒரு விநாடியில் 64 முறை விழித்தெழுந்து என்ன நிகழ்வுகள்...