இளைஞர்களுக்கான தார்மிக ஆதரவு

வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார். அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது. பாதியில் விட்ட படிப்பு சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கி...