தாம்பத்தியத்தில் வெற்றிக்கு கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக் கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால், செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது. உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும். தாம்பத்தியம் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும். கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புக...