சிறுநீரை அடக்கினால் வரும் ஆபத்துக்கள். விளக்குகிறார் டாக்டர் பிரியா விசுவாசம்

அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது. ஏன் இந்த வயதிலேயே சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று? என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, பள்ளிக்கூடத்தில் டாய்லெட் செல்ல விருப்பம் இல்லாமல் சிறுநீரை அடக்கியிருக்கிறாள் அஸ்வினி. ரொம்ப அவசரம் என்றால் மட்டுமே, பள்ளிக்கூட டாய்லெட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள். அஸ்வினியைப் போல ஏராளமான சிறுவர் சிறுமியர் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி திருப்பூரைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா விசுவாசத்திடம் கேட்டோம். ”சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று இருபாலாருக்குமே வரக்கூடிய பிரச்னைதான். ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்குதான் இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உண்டு. அதிலும், ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்குச்...