Posts

Showing posts with the label Astrology

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – மீனம்

Image
மீன இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன்,  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். ...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – கும்பம்

Image
கும்ப இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.  உங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம்...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – மகரம்

Image
மகர இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – தனுசு

Image
தனுசு இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிள...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – விருச்சிகம்

Image
விருச்சிக இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – துலாம்

Image
துலா இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்ச...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – கன்னி

Image
கன்னி இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :   திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். வி...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – சிம்மம்

Image
சிம்ம இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை. உங்கள் இராசிக்கான பரிகாரம் :  வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல தி...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – கடகம்

Image
கடக இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – மிதுனம்

Image
மிதுன இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதி...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – ரிஷபம்

Image
ரிஷப இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேக மாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.  உங்கள் இராசிக்கான பரிகாரம் :  முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்ப...

2016 புத்தாண்டு இராசி பலன்கள் – மேஷம்

Image
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :  முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் ...

தமிழ் நாட்டில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Image

இன்றைய ராசிபலன் 05-Nov-2015

Image
மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். மிதுனம் மிதுனம்:  சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள். கடகம் கடகம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தரு ...

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! 9,18,27

Image
9,18,27 ம் தேதியில் பிறந்தோர் : இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை  மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும். 1      2     3     4     5   6   7     8     9     >> Next

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! 8,17,26

Image
8,17,26 ம் தேதியில் பிறந்தோர் : இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது.  2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது. 1      2     3     4     5   6   7     8     9     >> Next

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! 7,16,25

Image
7,16,25 ம் தேதியில் பிறந்தோர் : இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான். 1      2     3     4     5   6   7     8     9     >> Next

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! 6,15,24

Image
6,15,24 ம் தேதியில் பிறந்தோர் : இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது. மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும். 1      2     3     4     5   6   7     8     9     >> Next

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! ( 5,14,23 )

Image
5,14,23 ம் தேதியில் பிறந்தோர் : இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு. 1      2     3     4     5   6   7     8     9     >> Next

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..! ( 4,13,22,31 )

Image
4,13,22,31 ம் தேதியில் பிறந்தோர் : இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம். 1      2     3     4     5   6   7     8     9     >> Next