Posts

Showing posts with the label Srilanka cricket

சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி || Sangakkara dismissed Dhoni

Image
டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார். சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஸ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் டோனி மொத்தம் 124 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. 151 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். டோனி 124 விக்கெட்டுகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தினேஷ் ராம்தின், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். T- 20 cricket tournament as the highest wicket -keeper Dhoni in terms of players who dismissals , Sangakkara precedes . Campiyans League match against Perth skarccars asis...

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக அத்தபத்து நியமனம் || Atapattu appointed chief instructor of the Sri Lankan cricket team

Image
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இன்று கூடியபோது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. மாவன் அத்தபத்து சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தென் ஆபிரிக்க மற்றும் பாகஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களின் போது இலங்கை அணியின்  பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும், நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரருமான அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதங்கள் அடங்கலாக 5,502 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 268 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,529 ஓட்டங்களைக் குவித்துள்ளார். Atapattu appointed Sri Lanka cricket team's chief instructor mavan . The decision taken today, the meeting of the executive committee of Sri Lanka Cricket . Mavan Atapattu recently in Sri Lanka cricket series against South Africa and Sri Lanka during the team's pakastan Acting instructor . Sri Lanka 's former captain , stars and cricket player in his...

லசித் மாலிங்கவின் முதலாவது விக்கெட் - Lasith Malinga's First Wicket

Image
லசித் மாலிங்கவின் முதலாவது விக்கெட் - Lasith Malinga's First Wicket லசித் மாலிங்கவின் முதலாவது விக்கெட் - Lasith Malinga's First Wicket

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு ரகசியம்! கசிந்த உண்மை | Muttiah Muralitharan's bowling secret! Leaked true

Image
இலங்கை அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பற்றிய கருத்துக்களை இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா பதிவு செய்துள்ளார். இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா இதுகுறித்து பதிவு செய்துள்ள கருத்தில், மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல, முரளிதரன் ஒரு வினோதமான பந்து வீச்சாளர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர் இவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கருதப்பட்டது. ஆனால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சின் அனுகூலங்களை மட்டும் நான் கூற விரும்புகிறேன். அவரது பந்து வீச்சு முறை முற்றிலும் வேறுபட்டது. அவர் பந்துகளை பயங்கரமாகத் திருப்பக் கூடியவர் என்பதே பிரதானமாக இருந்து வருகிறது. மேலும் அவர் பல்வேறு விதமான பந்து வீச்சுகளை வைத்துள்ளார் (தூஸ்ரா, லெக்ஸ்பின்). ஆனால் அது ஒரு திறமைதான் என்றாலும், அவரிடம் நான் காண்பது ஆஃப் ஸ்பின், ஆஃப் பிரேக் வகையிலேயே அவரால் தினுசு தினுசாக வீச முடிகிறது என்பதே...

மஹேல ஜெயவர்த்தனா ஒரு டெஸ்ட் சகாப்த்தம் - சிறப்பு கட்டுரை

Image
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜெயவர்த்தனே விடைபெற்றார். ஆனால் இவர் 2015 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜெயவர்த்தனே தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலே அரைசதம் விளாசினார். ஆனால் அவரது அந்த அரைசதம் கண்டுகொள்ளப்படவில்லை. ஏனெனில் இலங்கை 952/6 என்ற டெஸ்ட் சாதனை ஓட்டங்களை எட்டியது. சனத் ஜெயசூரியா 340 ஓட்டங்களையும், ரோஷன் மகானாமா 225 ஓட்டங்களை எடுக்க இருவரும் இணைந்து 576 ஓட்டங்களை சேர்த்து இந்திய பவுலர்கள் கையை ஒடித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இதே மட்டமான ஆடுகளத்தில் தான் அ...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி: ஹெராத் அசத்தல்

Image
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்கள் குவித்தது. இதில் தரங்கா அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஜீனைட் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், ஹெராத்தின் சுழலில் திக்கித் திணறியது. இவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பின்பு பொறுமையான ஆட்டத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் 332 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷப்ராஸ் அகமது அதிகபட்சமாக சதம் விளாசினார். இவர் 103 ஓட்டங்களை எடுத்து அணியின் ஓட்டங்கள் உயர காரணமானார். இதனையடுத்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தரங்கா (45 ஓட்டங்கள்), சில்வா (17 ஓட்டங்கள்) சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறினர். பின்னர் இணைந்த சங்க்காரா, ஜெயவர்...