மஹேல ஜெயவர்த்தனா ஒரு டெஸ்ட் சகாப்த்தம் - சிறப்பு கட்டுரை

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜெயவர்த்தனே விடைபெற்றார்.

ஆனால் இவர் 2015 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜெயவர்த்தனே தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலே அரைசதம் விளாசினார். ஆனால் அவரது அந்த அரைசதம் கண்டுகொள்ளப்படவில்லை. ஏனெனில் இலங்கை 952/6 என்ற டெஸ்ட் சாதனை ஓட்டங்களை எட்டியது.

சனத் ஜெயசூரியா 340 ஓட்டங்களையும், ரோஷன் மகானாமா 225 ஓட்டங்களை எடுக்க இருவரும் இணைந்து 576 ஓட்டங்களை சேர்த்து இந்திய பவுலர்கள் கையை ஒடித்தனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இதே மட்டமான ஆடுகளத்தில் தான் அவர் 374 ஓட்டங்களை எடுத்திருந்தார். இவர் எடுத்த 11,814 ஓட்டங்களில் இலங்கையில் துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் இவர் எடுத்த ஓட்டங்கள் 81 டெஸ்ட் போட்டிகளில் 7,167 ஓட்டங்களாகும். சதங்கள் 23, அரைசதங்கள் 34.

ஆனால் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற உயர்ரக பிட்ச்களில் இவரது ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை என்பதை அவரது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் 16 டெஸ்ட்களில் 969 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் அவுஸ்திரேலிய மண்ணில் எடுத்தது 7 டெஸ்ட்களில் 440 ஓட்டங்களே. இதில் 104 என்பது இவரது அதிகபட்ச ஓட்டங்கள். சராசரி 31.42.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் 1782 ஓட்டங்களை 57.48 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் அதற்கு நேர் மாறாக 8 டெஸ்ட் போட்டிகளில் 446 ஓட்டங்களை பெற்றுள்ளார். அங்கு விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராகவும் இதே கதைதான். 13 டெஸ்ட் போட்டிகளில் 1028 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 48.95. ஆனால் நியூசிலாந்து மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் 194 ஓட்டங்களே.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் 2212 ஓட்டங்கள், அதிகபட்ச ஓட்டங்கள் 213. சராசரி 58. இதில் 8 சதங்கள் 10 அரைசதங்கள். ஆனால் இங்கிலாந்து மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளில் 788 ஓட்டங்களே. சராசரி 35.81. 2 சதங்கள் 4 அரைசதங்கள்.

11,814 ஓட்டங்களில் ஒத்த தன்மையுடைய ஆசிய ஆடுகளங்களில் மட்டும் 109 டெஸ்ட் போட்டிகளில் 9399 ஓட்டங்களை எடுத்துள்ளார் ஜெயவர்த்தனே.

இந்த புள்ளி விவரங்களின் படி, இலங்கை அணிக்கு இவர் சிறந்த வீரராக மற்றும் அரிய பொக்கிஷமாக இருக்கலாம். ஆனால் இவர் எடுத்துள்ள ஓட்டங்களால் இவரை உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களின் வரிசையில் சேர்க்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

தலை சிறந்த வீரர்களான சச்சின், லாரா, டிராவிட், லஷ்மண், சேவாக், காலிஸ், பொண்டிங், சங்கக்காரா, கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்களின் வரிசையில் வைத்து பேச முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால் இவரது 11000க்கும் அதிகமான ஓட்டங்கள், இவரை இந்த பட்டியலில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தை இலங்கை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood