பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி: ஹெராத் அசத்தல்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்கள் குவித்தது. இதில் தரங்கா அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஜீனைட் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், ஹெராத்தின் சுழலில் திக்கித் திணறியது. இவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பின்பு பொறுமையான ஆட்டத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் 332 ஓட்டங்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய ஷப்ராஸ் அகமது அதிகபட்சமாக சதம் விளாசினார். இவர் 103 ஓட்டங்களை எடுத்து அணியின் ஓட்டங்கள் உயர காரணமானார்.
இதனையடுத்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தரங்கா (45 ஓட்டங்கள்), சில்வா (17 ஓட்டங்கள்) சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டு வெளியேறினர்.
பின்னர் இணைந்த சங்க்காரா, ஜெயவர்த்தனே ஜோடி அணியின் ஓட்டங்களை உயர்த்தியது. ஓட்டங்கள் 186 என இருந்த போது அஜ்மல் வீசிய பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சங்க்காரா வெளியேறினார்.
சங்க்காராவை தொடர்ந்து 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜெயவர்த்தனே அதே பந்து வீச்சாளரின் பந்தில் பெவிலியன் திரும்பினார். இது இவருக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் பலத்த வரவேற்பு இருந்தது. இத்துடன் டெஸ்டில் இவரது சாதனை பயணம் முடிவுக்கு வருகிறது.
அடுத்து களமிறங்கியவர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 282 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை. அணித்தலைவர் மேத்யூஸ் மட்டும் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தானில் வகாப், அஜ்மல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரெஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 271 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொடுக்கப்பட்டது.
வெற்றியை நோக்கி பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கமே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தானில் விக்கெட்டுகள் சரிய தொடங்கின.
மன்சூர் (10 ஓட்டங்கள்),ஷாகாட் (8 ஓட்டங்கள்), அசார் (10 ஓட்டங்கள்), யூனிஸ் கான் (8 ஓட்டங்கள்), மிஸ்பா-உல்-ஹக் (3 ஓட்டங்கள்) என முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர்.
ஷபீக் 32 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷப்ராஸ் அரைசதம் அடித்தார். இவர் 55 ஓட்டங்கள் குவித்தார். தனது 4வது நாள் ஆட்டநேர முடிவில் திணறிய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருந்தது.
இதனையடுத்து இன்று தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களில் சுருண்டது.
இலங்கை தரப்பில், சிறப்பாக பந்து வீசிய ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசாத் 2 விக்கெட்டுகளையும், வெலகேதரா, பெரேரா தலா ஒரு விக்கெடுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் இலங்கை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இலங்கை இந்த தொடரில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

Comments
Post a Comment