"K” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?
கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து
அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம் மிகுந்தவர்களாகவும் மாயசக்தி, மனோவசியம், கற்பனை வளம், கதை, கட்டுரை படைக்கும் ஆற்றல மிக்கவர்களாகவும் இருப்பர். பிறரின் பாராட்டுதலும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

எந்தச் செயலையும் மிகைப்படுத்திப் பேசுவது இவர்களால் மட்டும்தான் முடியும். பிறருக்குப் போதிப்பதில் புத்தனாவர். அடுத்தவர் ஆலோசனையை இவர்கள் விரும்புவது இல்லை. உடல் உழைப்பை விரும்பாத இவர்களுக்குக் கிடைக்கும் பணிகளும் எளிதாக அமைந்துவிடும். வரவேற்பாளர், ஆசிரியர், திரைப்படக்கதை எழுத்தாளர், ஆன்மீகப் போதனையாளர் போன்ற பணிகளில் இருப்பர்.
ஞானத்தையும் கல்வியையும் அண்டங்களைப் பற்றியும் பேசுவர். பலமுறை யோசித்தாலும் செயற்பட வேண்டிய நேரத்தில் பின்வாங்கிவிடுவது இவர்களின் மனோபாவம். இவர்களின் சாந்தமான முகம் பெண்களுக்கு மிகப் பிடிக்கும். இவர்களாகக் காதலிக்க மாட்டார்கள். ஆனால், இவர்களைக் காதலிக்க பெண்கள் கூட்டமே வரும். காரணம், இவர்களின் அப்பாவியான முகத்தோற்றம்தான். ஏதேனும் ஒரு கலையில் ஆர்வமுள்ள இவர்கள், உடையணிவதில் மிகுந்த கவனம் செலுத்தவர். சூழ்நிலைக்கேற்றவாறு தன் செ யற்பாட்டை மாற்றிக்கொள்வதில் வல்லவர். சதாரண விடயங்களைப் பூதாகரப்படுத்துவதில் சூரர். குடும்பத்திற்குள்ளும் எதையாவது இப்படிக் குழப்பிக்கொள்வர். தோல்விகளைக் கண்டு துவண்டுபோவர். இருப்பினும் தோல்விகள் ஏற்படாவண்ணம் செ யல்களை வடிவமைக்க ஒன்றாம் ஏழாம் எண்ணினரை அருகில் வைத்துக்கொள்வது நலம்.
அம்மனின் அனுக்கிரகம் பெற்ற இவர்களுக்குப் பெண்களால் பேருதவி கிடைக்கும். பிறரின் உள்மனதை அறிந்து, அதற்கேற்ப செ யற்படுவது இவர்களின் தனிச்சிறப்பாகும். தெய்வீகம், ஞானம், தத்துவம் என்பனவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. வயிற்று உபாதை, நீர்சம்பந்தமான வியாதிகள் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும். இவற்றைப் போக்குவதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். வானம் கருத்தால் போதும். ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். சித்தா, ஹோமியோ மருத்துவம் இவர்களுக்கு அருமருந்தாகும்.
எழுதுகருவிகள், விவசாயம், பெண்களைக் கவரும் தொழில், தண்ணீர் சம்பந்தமானவை, கடல்வழி வியாபாரம், நகைக்கடை, ஜவுளி, நறுமணப் பொருள், பல்பொருள் அங்காடி, மருந்துக் கடை, திரைப்படம், சோதிடம், சாஸ்திரம், எண்சாத்திரம் போன்றவை இவர்களுக்கு ஒப்பான தொழில்களாகும்.
வம்புச் சண்டைக்குப் போகாத இவர்கள், வந்த சண்டையையும் விட்டுவிடுவர். வசீகரத் தோற்றமுடைய இவர்கள், பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எந்தப் பழக்கத்திற்கும் அடிமையாவதைத் தவிர்க்கவேண்டும். இந்த மனித நேயப் பிரியர்கள், சோம்பலை எதிர்த்து, சுறுசுறுப்பை வரவழைத்து, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நி ச்சயம் வாழ்வில் உயர்வு உண்டு.
ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Comments
Post a Comment