இன்றைய ராசி பலன்கள் - 4/5/2014

மேஷம்
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தைரியம் கூடும் நாள்.


ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உடல் நலம் சீராகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உற்சாகமான நாள்.


மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.  


கடகம்
கடகம்: எதிர்காலம் பற்றிய பயமும், வீண் டென்ஷனும் வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர் கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


கன்னி
கன்னி: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப்பு டன் செயல்படுவீர்கள். உங் களிடம் பழகும் நண்பர் கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கி யவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். முயற்சி கள் பலிதமாகும் நாள்.


துலாம்
துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் கவலை கள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறு களை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


தனுசு
தனுசு: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. திறமைகள் வெளிப் படும் நாள்.    


மகரம்
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அமோகமான நாள்.


கும்பம்
கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந் ததை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட் டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.

மீனம்
மீனம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood