நல்ல காரியத்திற்காக அரை நிர்வாணமாக நின்ற யுவதி வீடியோ
நா மட்டும் ஏன் இப்படி கருப்பா அசிங்கமா இருக்க, அவன் அல்லது அவள் மட்டும் எப்படி இவ்ளோ அழகா இருக்கான்னு தாழ்வு மனப்பான்மையால் உங்கள் சொந்த உடலையே வெறுத்தவரா நீங்கள்?. ஆம் என்றால், இனி ஒருபோதும் அப்படி நினைக்காதீர்கள் என்கிறார் ஜே வெஸ்ட். உடல் மற்றும் மன நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் eating disorder எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த இவர் சமூக மாற்றத்திற்காக தன் சொந்த உடலையே ஆயுதமாக மாற்றியுள்ளார். அவர் செய்த காரியத்திற்கு முன்பாக அதன் பின்னணியை பார்ப்பது நல்லது. 60 சதவீத இளைஞர்கள் தங்கள் சொந்த உடலையே அசிங்கமாக நினைக்கிறார்கள் என்கிறது ஒரு பிரபலமான உளவியல் ஆய்வு. தங்கள் சொந்த உடலையே வெறுக்கும் மன நிலைக்கு எது அவர்களைக் கொண்டு சென்றது. இந்த மன நிலையை மாற்ற நினைத்தவர் என்ற கோணத்தில் இருந்துதான் ஜே வெஸ்ட் செய்த காரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த வாரம் லண்டனின் பரபரப்பான பிக்காடில்லி சர்க்கஸ் என்ற இடத்திற்கு வந்த ஜே, தன் ஆடைகளைக் களைந்து விட்டு கண்களை மூடிக் கொண்டு ஒரு பதாகையை தன் முன் வைத்தபடி நின்றார். அந்த பதாகையில், “ eating disorder ஆல் பாதிக்கப...