ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ.......
ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது

கமலஹாசன் நடிப்பில் இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இதிலும் அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆஷாசரத் தோன்றினார். இதில் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து கமலின் அடுத்த படமான தூங்காவனத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களிலும் பிரபலமான ஆஷா சரத்தின் ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியானது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷா சரத், தனது படத்தை மார்பிங் செய்து சிலர் வேண்டுமென்றே இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இதில் ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ காட்சிகள் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு ஐ.பி. முகவரியில் இருந்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிய வந்தது. போலீசார் அந்த முகவரியை கண்டுபிடித்து விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் இந்த ஆபாச வீடியோவை தயாரித்து அதனை இன்டர் நெட்டில் பரப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கொச்சி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
கேரளாவில் இதற்கு முன்பு ஆன் அகஸ்டின், லட்சுமிமேனன், தீப்திஷதி ஆகியோர் பற்றியும் இது போல ஆபாச வீடியோக்கள் வெளியானது. இச்சம்பவத்தை சிலர் உடனடியாக மறுத்து அறிக்கை விட்டதோடு போலீசிலும் புகார் செய்தனர்.
Comments
Post a Comment