“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர். நல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும். குடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெர...