லிபியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தலைவன் பலி - பென்டகன் தகவல்

வாஷிங்டன், 

லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் கொல்லப்பட்டான் என்று பென்டகன் தகவல் வெளியிட்டு உள்ளது.

சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறியாட்டம் நாளுக்குநாள் அதிகரித்தே செல்கிறது. இருநாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாத படையை ஒழித்து கட்டும் பணியில் அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளின் படை போராடி வருகிறது. ரஷியாவும் தாக்குதலை தீவிரப்படுத்தியது. லிபியாவிலும் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலையைவெட்டி  வெறியாட்டம் ஆடினர். இதுதொடர்பான வீடியோவை இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் லிபியாவில் அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் லிபியாபிரிவின் தலைவன் அபுநபில் கொல்லப்பட்டான் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்து உள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் லிபியா பிரிவின் முக்கிய தலைவர்களில் அபுநபில் ஒருவன் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் கிறிஸ்தவர்களை கொலை செய்து தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில் பேசியவன் இவனாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

லிபியாவில் அபுநபில் இறப்பு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும் என்றும் இவர்கள் அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லிபியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது இது முதலாவதாக இருக்காது, ஆனால் ஐ.எஸ். தீவிரவாத தலைவர்களுக்கு எதிராக முதல்முறையாக தாக்குதல் நடத்திஉள்ளது, ஐ.எஸ். தீவிரவாதிகள் எங்கு எல்லாம் உள்ளார்களோ, அங்கெல்லாம் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood