குப்பை தொட்டியை தாக்கிய மேக்ஸ்வெல்: டிவிட்டரில் கலகல பேச்சு || Maxwell hit litter: Clink Talk on Twitter
சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடத்தையை மீறியதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் மேக்ஸ்வெல் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மொஹாலியில் கோப்ராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைபிராண்ட் எங்கெல்பிரெக்ட் என்பவரிடம் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து கிளென் மேக்ஸ்வெல் வெளியேறினார்.
இதனால் வெறுப்படைந்த அவர் பெவிலியன் திரும்பிச் செல்லும் போது அருகே வைக்கப்பட்டிருந்த குப்பை போடும் தொட்டியை மட்டையால் தாக்கியதாக புகார் வெளிவந்தது.
இது சர்வதேச கிரிக்கெட் வாரிய நடத்தையில் விதிமீறல் லெவல் 1 வகையைச் சேர்ந்தது. அதாவது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதானம், மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துதல் விதிமீறல் ஆகும்.
இதனையடுத்து குப்பை தொட்டியை தட்டிவிட்டதை மேக்ஸ்வெல் ஒப்புக் கொண்டார். லெவல் 1 என்பதால் வெறும் எச்சரிக்கையோடு தப்பித்தார் கிளென் மேக்ஸ்வெல்.
இதன் பின்னர் தனது டிவிட்டரில் மேக்ஸ்வெல் கூறுகையில், குப்பைத் தொட்டியை தட்டிவிட்டதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
அதன் பிறகு குப்பைத் தொட்டியுடன் நீண்ட நேரம் பேசினேன். இப்போது எங்களிடையே உறவு நல்ல முறையில் உள்ளது என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப், கோப்ராஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Campiyans League match yesterday for violating the competitive behavior of the Kings XI Punjab team's player Maxwell warned.
Mohali match against the Cobras caipirant enkelpirekt dismissed Glenn Maxwell, who was left out of the 23 runs.
A disgusted when he goes back to the pavilion near the garbage had been hit with a bat, the complaint appeared to put the tank.
It is a violation of international Cricket Board Level 1 behavior belongs. Ie cricket equipment or clothing, ground, ground damage to the materials is a violation.
Maxwell subsequently admitted knocking litter. Level 1 since Glenn Maxwell escaped with just a warning.
Maxwell said in his Twitter Subsequently, the litter tattivittatark apologize to the fans.
Then I talked a long time with the trash. Now that there is a good relationship between us pativittullar joked.
Kings XI Punjab yesterday, said Cobras team defeated by 7 wickets
Comments
Post a Comment