ஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் || Atama jeyiccomata Movie Review


தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் டார்க் ஹுயுமர் தான். இதை மையமாக கொண்டு வெளிவந்த மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா.
கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகர் கருணாகரன், பத்து லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறார். பிறந்ததில் இருந்து காமன் பாத்ரூமில் காலை கடன்களை முடிக்கும் காலனி குடித்தனத்தில் காலம் தள்ளும் கதாநாயகி விஜயலட்சுமி.
வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக தன் தள்ளுவண்டி கடையில் நாஷ்டா திண்ண வரும் கருணாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், முதல் இரவு முடியும் தருவாயில் கருணா பெரும் கடன்காரன், அவர் வீட்டில் தான் வட்டிக்கு கொடுத்த கடன்காரர்கள் எல்லாம் வந்து போவார்கள்...எனும் விஷயம் தெரிந்து விவாகரத்து வாங்காத குறையாக கடனை அடைத்து விட்டுவா...என விலகி போகிறார்.
இந்நிலையில் கருணாவின் கால்டாக்ஸியில் பை நிறைய பணத்துடன் வந்து ஏறும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜி, தன்னை சரியாக கவனித்துக் கொண்டால் நடக்க இருக்கும் 20-20 மேட்ச் முடிந்ததும் உன் கடனை நான் அடைக்கிறேன் என வாக்குறுதி தருகிறார்.
ஆனால் பாலாஜி கத்தி குத்துபட்டு மேட்ச்க்கு முன்பே மர்மமாக மரணமடைகிறார். கால்டாக்ஸி டிரைவர் கருணாகரன் தான் குற்றவாளி என போலீஸ் இன்ஸ்பெக்டர் சிம்ஹா, கருணாவை கைது பண்ண, அவரை சிம்ஹாவிடம் தான் மும்பை போலீஸ் என ஏமாற்றி அழைத்து போகிறார் ஆடுகளம் நரேன்.
சிம்ஹா ஏமாந்தது தெரிந்தும் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரும் எண்ட்ரி ஆகிறார். போலீஸ் எல்லோரும் சேர்ந்து கருணாவையும், ஆடுகளம் நரேனையும் பிடித்தார்களா? கருணா தான் கொலையாளியா? கருணாவிவை நரேன் கடத்த காரணம் என்ன? கருணாவிற்கு பத்து லட்சம் கிடைத்ததா? பல கோடி கிடைத்ததா? சிம்ஹா சிறப்பான போலீஸ் என பெயர் எடுத்தார்? கருணா, விஜயலட்சுமி ஜோடி சேர்ந்ததா? என பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்த்து விடை தெருகிறார் இயக்குனர் பத்ரி.
ஐந்தாம் படை, தில்லு முல்லு போன்ற கமர்ஷல் படங்களுக்கு பிறகு பத்ரி கொஞ்சம் இப்படத்தை வித்தியாசமாக எடுக்க மெனக்கெட்டுள்ளார். படத்தின் பலமே நடித்த அனைத்து நடிகர்களும் மிக அழகாக யதார்த்தமாக நடித்துள்ளனர். சான் ரோல்டன் 1 பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை நன்றாக உள்ளது.
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்துள்ளனர். பலவீனம் சொல்லி கொள்ளும் படி ஏதும் இல்லை.
ஆடாம் ஜெயிச்சோமடா என்று டைட்டிலேயே படத்தின் ரிசல்ட்டையும் அவர்களே கூறிவிட்டார்கள்.
ரேட்டிங்-3.5/5

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!