சிநேகாவின் காதலர்கள் – விமர்சனம் Snehavin Kathalargal Movie Review

தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரங்களின் நிலை என்பது அஞ்சான் சமந்தாவின் டவுசர் போலத்தான். இருக்கு ஆனா இல்லை ரகம் தான். எல்லாப்படத்திலும் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பார். ஆனால் கதை நாயகியாய் இருக்க மாட்டார்.

பொதுவாக அழகான பெண்களுக்கு சினிமா வாய்ப்பு என்பது ஆண்களை விட மிக எளிதாய் கிடைத்துவிடும். கல்லூரி வாசலில், காபி ஷாப்பில் என துரத்திப்பிடித்து  வாய்ப்பு கொடுப்பார்க்ள. ஆனால் அழகான பெண் கதாபாத்திரங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது.  கதாநாயகனுக்கு மூடு வரும்போது கூட ஆடுவதற்கும், வில்லனுக்கு மூடு வரும்போது படாத பாடு படுவதற்குமான ஜல்லி கதாபாத்திரங்களே நம் சினிமா கதைகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றன.

இந்த சினிமாவுக்கு தெரியாத பல சுதந்திரமான நிஜ பெண் கதாபாத்திரங்கள் எக்காலமும் நம் அருகில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். தன் உடை, தன் நட்பு, தன் காதல், தன் காமம் என தன் வாழ்க்கையை தானே முடிவு செய்யக்கூடிய, தைரியமாக காதலில் விழுந்து அதில் பிரச்சினை என்றால் அதைவிட தைரியமாய் அதிலிருந்து எழுந்து, வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து, விரும்புவனோடு இணைந்து வாழக்கூடிய பெண்கள் நம்மைச்சுற்றி தோழியாய், நண்பியாய், தெரிந்தவராய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  நாமும் அவர்களை ரசித்து வியந்து பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறோம்.

அதுவும்  பெரும்பாலான சினிமா இயக்குநர்களின் நட்பு வட்டத்தில் இது போன்ற சுதந்திர பெண்களை ஏராளம் இருக்கிறார்கள்.  ஆனாலும் அவர்களின் படங்களில் ஏனோ சௌகர்யமாய் காணாமல் போய்விடுகிறார்கள். அது டெம்ப்ளேட் கதாநாயகி காரக்டர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டுவிடுகிறது.

சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச உரிமை என்பது ஆண் கதாபாத்திரத்துடன் இணைந்து கதைக்குள் வருவதுதான். இதை எப்போதாவது வரும் சில படங்கள் அரிதாய் உடைக்கும்.. அப்படி ரொம்ப காலத்திற்கு பின் வந்திருக்கும் ஒரு படம்தான் சிநேகாவின் காதலர்கள்.

ஒரு பெண் தன்னைப் பெண் பார்க்க வருபவனிடம் சாரி பாஸ் என்ன வேண்டாம்னு சொல்லிடுங்க என ஆரம்பித்து..

ஏன்னா நீங்க ரொம்ப லேட்..

ஏன்னா நான் இப்போ ப்ரெக்னெண்ட்..

வேணும்னா கூட கொடைக்கானல் வரைக்கும் வர்றீங்களா..

என அடுத்தடுத்த காட்சிகளில் அதிர்ச்சியுடன் பயனிக்கிறது.

போகும் வழியில் தன் வாழ்வில் சந்தித்த மூன்று விதமான ஆண்களைப் பற்றியும் அவர்களுடனான காதல் அதில் சந்தித்த பிரச்சினைகள், வேதணைகள் என பகிர்ந்து கொள்கிறாள்.

இறுதியில் கொடைக்கானலில் தான் தேடிச்சென்ற அவன் கிடைத்தானா அல்லது “எதுவானாலும் எனக்கு ஓக்கேதான். என்னையே கல்யாணம் பண்ணிக்கேயேன்” எனக் கேட்கும் இந்த இளைஞனுடன் இணைந்தாளா என்ற சஸ்பென்ஸ் உடன் படம் நிறைகிறது.

இந்த விதத்தில் சிந்தித்து அந்த சிந்தனையை பெரிய சமரசங்கள் இல்லாமல் படமாக்கியதற்காகவுமே இயக்குநர் முத்துராமலிங்கன் பாராட்டப்படவேண்டயவர்.

படத்தில் குறைகள் ஆங்காங்கே இருக்கின்றன. பல இடங்களில் நல்ல எமோசனலான காட்சிகள் வரும் போது அவற்றை வெறும் வசனங்களில் தாண்டிப் போய் விடுகிறார் என்பது உறுத்தல். அவற்றை அழுத்தமான காட்சிகளாய் படமாக்கியிருத்தால் இன்னும் அழகான அனுபவத்தை கொடுத்திருக்கும்.

மேலும் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் ஒரு காதலின் பிரிவு என்பது வலி மிகுந்தது.. அடுத்த வலியை காட்சிப்படுத்தாமல் அடுத்த காதலை உடனே ஆரம்பிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் சின்சியாரிட்டி மீது நம்பிக்கை குறைகிறது. இடையில் கொஞ்சம் இடைவெளியை காட்டியிருக்கலாம்.

இந்த குறைகளை தன் இலக்கிய டச்சுடன் கூடிய அழகான வசனங்களால் சமன் செய்கிறார் இயக்குநர்.  அந்த உதவி இயக்குநர் கதையில் ‘உங்ககிட்ட ஒரு கதை இருக்கு.. அங்க ஒரு தயாரிப்பாளர் இருக்கார். உங்க கதை பிடிச்சிருந்தா அதை படமா எடுக்க போறார். இதுல எதுக்கு இத்தனை காம்ளிகேசன்?” என்ற கேள்வியும் அதற்கு அந்த உதவி இயக்குநர் சொல்லும் விளக்கமும் சினிமாவின் எதார்த்தத்தை நச்சென உரித்துக்காட்டுகிறது. அதே போல கதை திருடுபவர்களைப் பற்றியும் குட்டுகிறது.

இடையில் சத்தமில்லாமல் ஜாதி வெறியை, தன் அம்மா அம்மா என செல்லமாய் வளர்த்த பெண்ணை ஜாதிவிட்டு காதலித்தாள் என்பதற்காக உயிருடன் எரிக்கும் மனித மிருகங்களை, ஜாதிக்காக சல்யூட் அடிக்கும் யூனிபார்மை உறித்துக்காட்டியிருக்கிறார்.

என்ன நம்பி இவ்வளவு தூரம் வர்றீங்களே நானும் ஒரு பொருக்கியா இருந்தா என்ற கேள்விக்கு ‘ஒரு பறவை ஒரு மரத்துல அமர்றது அந்த கிளையை நம்பியில்லை. தன் சிறகை நம்பி’ என்ற இந்த ஒற்றை வரியில் சிநேகா கதாபாத்திரத்தின் மொத்தத்தையும் விவரித்திருக்றார் முத்துராமலிங்கன். Awesome.

படத்தின் மிகப்பெரிய பலம் சிநேகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி ரெட்டி. இந்த பாத்திரத்திற்கெனவே பிறந்தவர் போல அத்தனை எளிதாய் காரக்டராய் மாறிவிட்டிருக்கிறார்.  அந்த மூக்குக்கண்ணாடியும், வளையமும் , பளிச் புன்னகையும்..இந்த கதாபாத்திரத்தின் மீது வரவேண்டிய பல விமர்சனங்களை மழுங்கடித்து சமாளிக்கிறது என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவு.. கொடைக்கானல் காட்சிகளில் அருமை. அந்த குருவி பாடலை கலை நயத்துடன் படமாக்கியிருக்கிறார்கள். அந்த நேர்த்தியை படம் முழுவுதும் கையாண்டிருந்தால் படத்தின் தரம் இன்னும் நன்றாய் உயர்ந்திருக்கும்.

இசை இரா.ப்ரபாகர். மதுரை பாடலிலும், குருவி பாடலிலும் கவனிக்க வைக்கிறார். பின்னணி இசையில் பல இடங்களில் ஏதோ போதவில்லை என்ற உணர்வே வருகிறது. ஆனால் கடைசி 15 நிமிடங்களை வெறும் காட்சிகளாலும் பிண்ணனி இசையாலுமே விறுவிறுப்பாய் நகர்த்தியிருப்பதில் இசையமைப்பாளரும், இயக்குநரும்  இணைந்து சுவாரஸ்யமாக்கியிருக்கின்றனர்.

மொத்தத்தில் பட்ஜெட் பிரச்சினைகள் ஆங்காங்கே தடுக்கியிருந்தாலும், அந்த பட்ஜெட்டுக்குள் ஒரு நவீன பெண் கதாபாத்திரத்தை நாகரீகமாய் படமாக்கி ஒரு நீரோடை அனுபவமாய் தந்திருக்கிறார் இயக்குநர் முத்துராமலிங்கன். வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood