மங்கையர் மார்பகம் – சில உண்மைகளும், அதன் தீர்வுகளும்

பாலூட்டுதல் அல்லது முலையூட்டுத ல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையா ய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலு க்கான மனித உறுப்பான மார்பக ம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெரு மக்கள் அருளிய தீர்வொன்றி னையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.
பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றி ன் அளவு பரம்பரை உடல்வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்ப கத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திரு ப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரிய தாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திரு க்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொ ழியில் சொல்வதானால் பாலை உற்பத் தி செய்துதரும் நொதியங்களையும், திசு க்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்பு களைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகு வது வாழ்விய ல் முரண்பாடுகளில் ஒன்று.
அரை நூற்றாண்டுகளுக்கு முன் னர் வரையிலும் கூட இறுக்க மான மார்க்கச்சை அணியும் பழ க்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதே சத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின்மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்த னர். அவர்களின் ஆதிக்கத்தில் வந் த பின் னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்க மான உள்ளாடைகள், அதன் மேல் ரவி க்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.
இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பய ன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர் வை காரணமாக நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்ப கத்தில் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன் ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொ ள்ள ஆரம்பித்தனர். இது ஒருபுறம் என்றா ல், அழகியல் தேவை என்ற பெயரில் மார் பகங்களை பெரிதாக்கு கிறேன், சிறியதாக் குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைக ளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்கு ள்ளாவதும் தொடர்கிறது.
இயற்கையைமீறிய இம்மாதிரி செய ல்பாடுகளினால் பெண்கள்படும் வேத னைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீகயுகத்தில் பெண்ணாக பிற ந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்று நோய் (Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிர ம் இப் போதுதான் உணரப் பட்டு சீரான இடை வெளி யில் ஒவ்வொரு பெண்ணு ம் மார்பக புற்றுநோய்க்கான பரிசோத னைகளை செய்து கொள்ள நவீன மருத் துவம் வலியுறுத்துகிறது.
மார்பக திசுக்களில் ஆபத்தான செல் கள் உண்டாவதைத்தான் மார்பக புற்று நோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய் களுக்கு பாலைக் கொண்டு சேர்க் கும் நுண்ணறைகளின் உள் அடுக்கு களில் தோன்றும். இந்த மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடி ப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத் தை உண்டாக்கும்.
புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக் கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதி வில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறே ன். இன்றைய பதிவில் தேரையர் பெண் களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந் து கொள்கிறேன்.
ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக்கூடிய ஒரு வைத்தி ய முறையினை தேரையர் அருளி யிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
தேரையர் வைத்திய சாரம் என் கிற நூலில்வரும் அப்பாடல் பின் வருமா று…
தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத்தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டா ட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே
மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக் கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சிய டையும் என்கிறார்.
மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற் றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயி ற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடு த்துக் கொண்டு வந்து தாயத்துக் குடு வையில் அடைத்து, அந்த தாயத் தைக் கட்டிக் கொள்வதாலும் வளர் ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாத த்திற்கும் உட்பட்டது.
நன்றி – சித்தர்கள் இராச்சியம்
Check Best Tamil News
ReplyDeleteand Sri Lanka Tamil News
and Today News in Tamil
and Canada Tamil News
and numerology in tamil