காவியத் தலைவனை ஈரான் இயக்குனருக்கு காட்டுவேன் :ஏ.ஆர்.ரகுமான்

சென்னை: ஒய்நாட் சசிகாந்த், ராடான் மீடியா வருண் மணியன் இணைந்து தயாரிக்கும் படம், ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, ‘நான் 3 தலைமுறைகளுடன் பணியாற்றி இருக்கிறேன். முதல் தலைமுறைக்கு வாசித்திருக்கிறேன். இரண்டாவது மூன்றாவது தலைமுறைக்கு இசை அமைத்திருக்கிறேன். இது மூன்றாவது தலைமுறையின் படம். சமீபத்தில் பிரபல இயக்குனர் மஜீத் மஜீனாவைச் (ஈரானிய இயக்குனர்) சந்தித்து பேசினேன். அப்போது இந்திய படங்கள் நிறைய பார்க்கிறேன். ஆனால் உங்கள் கலாசாரத்தை விட்டு விட்டு மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்களே... என்று கேட்டார். அவருக்கு காவியத் தலைவனை காட்டுவேன்’ என்றார்.

வசந்தபாலன் பேசும்போது, ‘நாடக உலகைப் பற்றி நிறைய படித்து, நாடக நடிகர்களைப் பற்றி அறிந்துகொண்டு இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினேன். இதற்கு 10 கோடி ரூபாய் பட்ஜெட் என்றபோது பலர் நழுவினார்கள். சரியான நேரத்தில் சித்தார்த் மூலம் ஒய்நாட் சசி வந்தார். நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்காததால்தான் கமர்சியல் படங்களை நோக்கி இயக்குனர்கள் ஓடுகிறார்கள்’ என்றார். விழாவில், பிரபல நாடக கலைஞர்களான பி.சி.கலைமணி, நெல்லை ஸ்ரீராம், ஆனந்தன், பிரசாத் ராஜேந்திரன், எஸ்.பி.தமிழரசன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் பண முடிப்பை ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood