டிவிட்டரில் நிர்வாணப்படம்: நன்றி கூறிய இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் போத்தமின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இயன் போத்தமின் இங்கிலாந்து அணியின் முன்னாள் பன்முக வீரர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நீண்ட நாளைய சாதனைக்குரியவர் இயன் போத்தம்.

இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இவரது சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார்.இவரது டிவிட்டர் பக்கத்தை சுமார் 3,10,000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாண படத்தை பார்த்த இயன், தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்து போனார். முன்னாள் வெல்ஷ் அணியின் கால்பந்து வீரர் ராபி சேவேஜ், போத்தமின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அவருக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து போத்தம் உடனடியாக ”நான் எனது கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன், சில விஷமிகள் இங்கு வருகை தந்துள்ளனர்” என டிவீட் செய்தார்.

ஆனாலும் ஹேக்கருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் புகைப்படத்தினால் 20 நிமிடங்களில் 500 ஹிட்கள் கிடைத்தது. 25 நிமிடங்களில் ஹிட்டை 700ஆக உயர்த்தி விடுங்கள்” என்று நகைச்சுவையாக டிவீட் செய்துள்ளார் இயன் போத்தம்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood