திருமணத்திற்கு முன் கண்டிப்பாக உடலுறவு தேவையா?

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும் உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட இதில் பெருமளவு எதிர்மறைகள் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இதனை கண்டிப்பாக உச்சரிக்கவே கூடாது. பொது இடத்தில் உடலுறவை பற்றி வெளிப்படையாக பேசுவது பெருமளவில் எதிர்க்கப்படுகிறது.


அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளுதல் என்றால் கேட்கவே வேண்டாம், அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும். . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது இந்த சமுதாயத்தில் அதிமாக நடக்கும் ஒன்றே. ஆனாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றே. திருமணம் என்று வந்து விட்டால், திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு கூடவே கூடாது என்று சத்தியம் எடுப்பது எழுதப்படாத விதி. ஆனால் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைய, வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக மட்டுமே எடுக்கப்படும் சத்தியமாகவே அது பார்க்கப்படுகிறது.

அவைகளை கடைப்பிடித்தால் தானே இந்த சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக அதிகாரப்பூர்வமாக வாழ்க்கையை தொடங்க முடியும். ஆனால் ஏன் இப்படி என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? உச்சரிக்க கூட கட்டுப்பாடு இருக்கும் வார்த்தையான உடலுறவில் ஏன் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் ஈடுபட கூடாது? இரண்டு பேரும் மனது ஒத்து போய் உடலுறவு கொள்ள விருப்பப்படும் போது அதனை ஏன் சமுதாயம் எதிர்க்கிறது?

பழங்காலம் முதலே விதிமுறைகளை விதித்து அதற்கேற்ப அதனை பின்பற்றி வாழ்ந்து வரும் சமுதாயம் இது. அதை செய்ததற்கு முக்கிய காரணம் சமுதாயம் என்பது ஒரு அறநெறியுடன் விளங்குவதற்காக தான். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுவும் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தொடர்பான செயல்முறையில், சமுதாயத்தின் எண்ணம் மாறிக் கொண்டே வருகிறது. திருமணத்திற்கு முன் தன் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக் கொள்வதில் இன்றைய தலைமுறை மிகவும் வெளிப்படையாக உள்ளனர்.

பெருமளவு, இந்த கேள்விக்கு பதில், சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்தே அமையும். இதற்கு பதிலை முழுமையாக "ஆம்" அல்லது "இல்லை" என கூறி விட முடியாது. அதே போல், இந்த எண்ணத்தை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ பார்க்கவும் முடியாது. அதற்கு ஆதரவாகவும் பேசலாம் அல்லது எதிர்த்தும் பேசலாம். அதில் இருக்கும் நேர்மறையான சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

செக்ஸ் போன்ற ஒரு விஷயத்தை ரகசியமாக தான் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒருவரோடு எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் சரி, இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு முன் நூறு தடவையாவது யோசிப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் காதலன் அல்லது காதலியுடன் இதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் அது உங்களுக்கு பெரிய பயனாக இருக்கும். திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால், கண்டிப்பாக உங்கள் உறவு ஆழமாகும். திருமணத்திற்கு முன்பான உடலுறவை பற்றி நாம் பேசுவது என்றால், அதற்கு பிறகு அவரை திருமணம் செய்வது என்ற அடிப்படையில் தான். அதை விட்டு விட்டு வெறும் பொழுதுபோக்கு சந்தோஷத்திற்காக ஈடுபடும் உடலுறவை பற்றியது அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாலின விருப்பங்கள் அடங்கியிருக்கும். இது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்; அதனை மறுக்க முடியாது. இரண்டு பேரும் உடல் ரீதியான உறவில் ஈடுபட முடிவெடுக்கும் போது, அது உடல் ரீதியான சுகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவர் மீது மற்றவரின் இணையும் தன்மையை சோதிப்பதற்கும் உதவும். உடலுறவில் திருப்தி ஏற்படாமல் போவதால் பல திருமணங்கள் தோல்வியில் முடியும் உதாரணங்கள் பல உள்ளது. கணவன் அல்லது மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதை பற்றி திருமண அறிவுரையில் எதுவும் கூறப்படுவதில்லை. ஆனால் அது இருவருக்கும் உள்ள புரிதலை பொறுத்தே அமையும். உங்களுக்கான சரியான ஜோடியை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், கண்டிப்பாக சரியான பாதையில் நடைப்போட தயாராகி விடுவீர்கள்.

முதல் முறை உடலறுவு என்றால் பலவித உணர்ச்சிகளுடன் கூடிய நடுக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றே. திருமணத்திற்கு முன் உங்கள் வருங்கால கணவன் அல்லது மனைவியுடன் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் இந்த நடுக்கங்களை கடந்து வரலாம். திருமணம் ஆவதற்குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டும் விடுவீர்கள். அதன் பின் இருக்கும் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பீர்கள்.

காலப்போக்கில் திருமணத்திற்கு முன் கொள்ளும் உடலுறவை பற்றிய எண்ணங்கள் மாறி வந்தாலும் கூட, அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இன்னும் காலம் பிடிக்கும். இரண்டு பேரும் மனம் ஒத்து அதில் ஈடுபடும் போது, அதனை செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு முன் போதிய பாதுகாப்பை எடுப்பதற்கு மறந்து விடாதீர்கள். பொறுப்பாக செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood