பெண்களுக்கு ஆபத்தை தரும் முத்துப்பிள்ளை கர்ப்பம்

கர்ப்பம் தரிக்கிற பெண்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதத்தினருக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமும், அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினருக்கு புற்றுநோய் அபாயமும் இருக்கிறது. ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து 46 குரோமோசோம்களாக மாறும். முழு முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கரு முட்டையில் தாய்வழி குரோமோசோம்கள் இருப்பதில்லை. மேலும் தந்தையின் விந்தணுக்களின் குரோமோசோம்கள் இரட்டிப்பு அடையும். தாய்வழி குரோமோசோம்கள் முற்றிலும் இல்லாமல் போவதால், கருவோ, கரு வளரும் பையோ அல்லது நஞ்சுத் திசுக்களோ இருப்பதில்லை. மாறாக நஞ்சு, திராட்சை கொத்து போலக் காட்சியளிக்கும். இதையே முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம். சாதாரண கர்ப்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில்கூட பாசிட்டிவ் என்றே வரும். 45 நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தெரிந்தால், கருவைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், கர்ப்பத்தைக் கலைப்பதோடு, பிரச்சனை முடிந்தது என அலட்சியமாக இருக்க வேண்டாம். கரு வெளியேறிய பிறகும், எங்கேயாவது ஒட்ட...