அப்துல் கலாமிற்கு ரஜினியின் நெகிழ்ச்சி டுவிட், கமலின் உருக்கமான கவிதை

அப்துல் கலாம் அவர்களின் இழப்பு தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. இந்நிலையில் இவரின் இழப்பிறகு பல அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர். கமல் இதை கவிதையாக வெளிப்படுத்தியுள்ளார். கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும் இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன்என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும் நிரந்தரம் தேடுகின்ற செருக்கணிந்த மானுடர் தொண்டருக்கடிப்பொடி அம்மெய்யுணர்ந்த நாளிது புகழைத் தலையிலேந்திடாது பாதரட்சையாக்கிய கலாம் சாஹெப் என்பவர்க்கு சலாம் கூறும் நாளிது - கமல்ஹாசன் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார் ரஜினி தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வருத்தங்களை பதிவு செய்துள்ளார்.